பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

படிகள் 31 - ஆளுமை

சிங்கள சினிமாவில் அசோக்க ஹந்தமக - எல். வஸீம் அக்ரம்

ஒளி ஊடகத்தை தனது பிரதான ஆயுதமாக ஏற்றுக் கொண்ட ஆசோக்க ஹந்தகம, சினிமா உலகிற்கு அறிமுகம் தேவையில்லாத ஒரு இயக்குனர். கடந்த 20 வருடங்களாக சிங்களச் சினிமாச் சூழலில் தவிர்க்க முடியாதவர் மட்டுமின்றி அதிக சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்குமுட்பட்டவர்.

1992ல் இவரது முதலாவது திரைப்படமான 'சந்த கிணர' (ஆழழn டுயனல) தயாராகிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படம் அந்தந்த ஆண்டகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஏனைய திரைப்படங்களின் ஆக்கிரமிப்பினால் தனது இடத்தை அடைந்து கொள்ள முடியாமல் சுமார் ஆறு வருடகால இடைவெளிக்குப் பின் 1998ம் ஆண்டு வெளிவருகின்றது.

அதுவரை அசோக்க ஹந்தகமவை அவரது பல்கலைக்கழக மாணவ நண்பர்களைத் தவிர வேறு யாரும் இவரை ஒரு சினிமா சிருஷ்டி என்று அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

சந்த கிணர திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் ஹந்தகமவை முழுமையான, ஒரு ஒளி ஊடக செயற்பாட்டாளராக சர்வதேசமெங்கும் வரையறுத்துக் கொண்டனர். இவரை வெறுமனே உள்ள இயக்குனராக அன்றி சினிமாவில் குறிப்பாக மாற்றுச் சினிமாவில் முக்கிய ஒரு பிரதிநிதியாக உலகம் அடையாளம் கண்டு கொண்டது. சினிமாவுக்குள் தொடர்ச்சியாக கதையாடல்களுக்குட்பட்டு வருகின்ற அடையாளவாதம், யதார்த்த வாதம் போன்ற விடயங்களை தனது ஒளிப்டிமங்களால் குறிப்பாக சினிமாச்சித்திரங்ளாக நமது புலன்களுக்கு ஊடாக ஆகர்சிக்கின்ற பணியை ஹந்தகமவின் இந்த 20வருட கால வாழ்வு செயற்படுத்தியிருக்கின்றது.
சினிமா ஊடகத்தின் பொறுப்பை மிகவும் வலிமையாக பயன்படுத்தி அதன் பெறுபேறுகளை சமூகச் சிதைவுகளில், சமூகக் கட்டமைப் புகளில் ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போராட்டத்தை ஹந்தகமவின் சினிமா உலகு நிர்மானம் செய் துள்ளது. சினிமா என்ற ஒரு காட்சி ஊடகத்திலிருந்து அவர் தனது சமூகம் மீதான ஆழ்ந்த பிரக் ஞையை, கதையாடலை, இருப்பை மற்றும் எதிர்வு கூறலை சாத்திய மாக்க முடிந்துள்ளது.

சத்தியமாக ஹந்தகம சினிமா ஜாம்பவான் என்ற கீர்த்திக் கிரிடங் களால் முடிசூட்டப் பட்டாலும் அதே தளத்தில் அதிகப்படியான விமரிசனங்களுக்குள்ளும் விவாதங் களுக்குள்ளும் தாக்கங்களுக்குள்ளும் ஆட்பட்டிருக் கின்றார்.

சமூகத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்துகின்ற சக்தி சினிமா என்ற கலைக்கு இருக்கின்றது. அதற்குள் கவிதை, இலக்கியம், சமூகம், நாகரீகம், ஓவியம், விமரிசனம், இசை, சமயம், விழிப்புணர்ச்சி, பாலியல், பொருளியல், அரசியல் என்ற எண்ணற்ற அணுப் பிரலயங்கள் கூடுகட்டியுள்ளன. இவ்வெண்ணக் கருக்கலின் ஒட்டுமொத்த வெடிப்பு சினிமா. சினிமாவின் ஒவ்வொரு அசைவு களிலும் எனது இருப்பைத் தேடுகிறேன். எனது சுயத்தை தேடுகிறேன் என்கிறார் திரு. ஹந்தகம.

நான் மக்களது வரம்புகளுக்குள் ஒரு சினிமாக்காரன் என்ற அடையாளத்தை பெற்ற போதும், நான் எவ்வகையான சினிமாக் காரன் என்ற வினா என்னை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் ஒரு புறக் கண்ணாடியைக் கொண்டு எனது நோக்கையும், எனது அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவது எனது உருவாக்கத்தின் பின்னணி ஆகும்.

இது உண்மையில் ஒரு விளையாட்டு.  சமூகத் தினுட னான விளையாட்டு, அரசிய லுடனான விளையாட்டு, இன் னொரு முறையில் சொல்வ தாயின் சமூகத்தின் அசைவுகளு டனான ஒரு யுத்தம் சினிமா வாகும். நான் சினிமா என்ற ஒரு நுண் கலையின் அல்லது ஒரு உயிரூட்டியின் தன்மைகளை அதன் சொரூ பங்களில் இருந்து தான் வெளிப்படுத்த துணிகிறேன். மாறாக சடவாத சம்பிரதாயங்களில் இருந்தல்ல. குறிப்பாக சமூகம் ஒரு அறியாமைச் சுமையை சுமக்க எத்தனிக்கிறது என்றால், அதற்கு ஒத்தடம் கொடுக்க எனது சினிமா சிரம் சாய்க்காது என்கிறார் ஹந்தகம.


சினிமாவை அவர் ஒரு வெற்றுச் சட்டமாக பார்க்காது தமது விவ ரணங்களை அனுப்புகின்ற ஒரு பிரதான மூலமாகப் பார்க்கின்றார். ஹந்தகமவின் சினிமா அவரின் நேரடி ஆக்கிரமிப்புக்களால் ஏற் பட்ட காயங்களா? என்ற வினாவை அவரிடம் கேட்கத் தோனுகிறது.

இவரின் இரண்டாவது திரைப்படம் 'மே மகே சந்த' (வுhளை ஐள ஆல ஆழழn) இது எனது நிலவு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழ் சிங்கள உறவு பற்றி பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2002ம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்த யுத்தம், சமாதானம், முரண்பாடு, இனவாதம் உள்ளிட்ட அம்சங் களைப் பற்றி நேர்த்தி மிகுந்த பாணியில் பேசுகின்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த 'தனி தட்டுவென் பியாம்பன்ன' - 2002. (ஒற்றை சிறகுகளால் பறத்தல்) என்ற திரைப்படம் பெண்ணியம் பற்றிப் பேசுகின்றது. ஒரு பெண் இரண்டு நிலை சார்ந்த பார்வைகளால் அவதி யுருவதும் அவளது எண்ணங்கள் சமூகத்தின் மத்தியில் தோல்வி யடைவதும் இந்தப் படத்தின் கதைக்கருவாகும். அதாவது ஓரினச் சேர்க்கை இதன் முக்கிய குறியாகும்.


2005 ம் ஆண்டு ஹந்தகமவின் தணிக்கைக்கு உட்பட்ட படம் 'அக்சரய' (யு டுநவவநச ழக குசைந) இத் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் தாய்க்கும் சேய்க்கும் இடையில் இருக்கின்ற பரஸ்பரத்தைப் பற்றிப் பேசுகின்றது என்ற வாதம் ஹந்தகமவால் முன்வைக்கப்பட்ட போதும், அது பாலியல் கருத்தைப் பதிவு செய்கின்றது என்ற வாதத்தால் தணிக்கை உட்பட்டது. சமய வாதிகளும் அடிப்படை வாதிகளும் திரைக்கு வர முன்னர் வன்முறையில் இறங்கியதால் தடைசெய்யப்பட ஏதுவானதுடன் இவர் சமூக விரோதி என்றும் பொதுவாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்தத் திரைப்படம் தணிக்கைக்கு உட்பட்டதன் பின்னரே ஹந்த கமவின் ஆளுமை விரிவாகப் பேசப்பட்டது.

இவரது படங்கள் பொதுவாக கலாசார அடிப்படை வாதிகளி னதும், மரபு வாதிகளினதும் எதிர்ப்பைப்பெற்றுக்கொண்டன. அக்சரய திரைப்படம் திரைக்கு வராதபோதும் அது சீடிக்களாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இறுதியாக வெளிவந்த இவரது திரைப்படம் 'விது' இத் திரைப்படம் அரசியல் தலைமை களால் பாதிக்கப்பட்ட தனிமனித ஆளுமை நிறைந்த ஒரு சிறுவன் பற்றிப் பேசினாலும் ஆழமான நடைமுறை அரசியல் பற்றி குறியீட்டுப் படிமங்களுடன் வெளிப்படுத்தி இருந்தது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரம் எதிர்கால சந்ததியினரின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்ற விதம் பற்றிய ஒரு அறிவுபூர்வமான வெளிப்பாட்டைத்தந்தது விது. சிறுவர் திரைப்படம் என்ற தோரணையிலேயே விது தன்னைப் பாதுகாத்துக்கொண்டது. 2010ஃ2011 ஆகிய ஆண்டுகளில் ஊடகங் களால் அதிக கதையாடலுக்கு உட்பட்ட திரைப்படம் விது.

இவ்வாரான திரைப்படங்கள் அரசியல் வர்ணங்களால் பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் உட்பட்டிருந்தமை கண்கூடு.

இறுதியாக இவரது திரைப் படங்களில் பாலியல் காட்சிகள் வெள்ளிடையாகக் காட்டப் படுவதாக விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவரது சந்த கிணர, மே மகே சந்த, தனி தட்டுவென் பியாபன்ன, அக்சரய போன்ற திரைப்படங்களில் பாலியல் காட்சிகள் வெளிப் படையாக காட்டப்பட்டுள்ளன.


சடவாத மத இறுக்கங்கள் கலந்த ஒரு சமூகத்தில் இவ்வாறான பாலியல் காட்சிகள் கேள்விக் குட்படுவதும் அது ஏற்றுக் கொள்ளப் படுவதும் இருபக்க நியாயங்களைக் கொண்டிருந்தன.

சுனாமிக்குப் பின் எழுந்த சமூக ஒற்றுமை கருத்து முன்மொழிவை, வலுவூட்டும் வண்ணம் இவரது தொலைக்காட்சி நாடகம் ஒன்று தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையில் உள்ள இனத்துவ, அடையாளப் பிரிவுகளை ஒப்பீட்டும், அதனை களைவதற்குமான ஒரு ஊடக முயற்சியாக அமைந்தது. 2005ம் ஆண்டு இந்த தொலைக்காட்சி நாடகம் மக்களிடத்தில் பெரு வரவேற்புப் பெற்றது.
அண்மையில் ஹந்தகமயின் 'இனி அவன'; என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தமிழ் விடுதலைப் போராளி
ஒருவரின் வாழ்வைப் பேசுகின்றது

அசோக்க ஹந்தகம என்பவரை நான் முதல் முதல் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2005ம் ஆண்டு சந்தித்தேன். தணிக்கைக்கு உட்பட்ட 'அக்சரய' என்ற திரைப்படம் தொடர்பாக அப்போதிருந்த விவாதங்களை ஒருங்கிணைத்த நிகழ்வு அது. அந் நிகழ்வில் என்னை கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் அசோக்க ஹந்தகமவிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அந்த அறிமுகம் அவருடனான நட்புக்கு வழிசமைத்திருந்தது.

திரு. ஹந்தகம அவர்களது ஆளுமையை இன்று சர்வதேசம் மெச்சிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு வேளையில் அவர் பற்றி பதிவுகள் ஈழத்து சினிமா வாசகர்களுக்கு சற்று ஆருதல் தரும் என்று நம்புகிறோம். அதற்கு படிகள் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து - ஆசிரியர் கருத்து: படிகள் 31


வடமத்திய மாகாண சபையின் தற்போதைய கல்வி, தகவல் தொழிநுட்ப மற்றும் கலாசார அமைச்சர் கௌரவ எஸ்.எம். பேசல ஜயரத்தன பண்டார அவர்களின் வழிகாட்டலில் அமைச்சின் செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் மகாண தமிழ் சிங்கள எழுத்தாளர்களுடனானா சந்திப்பொன்று அண்மையில் மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எழுத்தாளர்களுடனான இச்சந்திப்பில் அநுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் மொழி மூல எழுத்தாளர்கள் 5 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா, கெகிரா சுலைஹா, நாச்சியாதீவு பர்வீன், அநுராதபுரம் றஹ்மதுல்லாஹ், எல். வஸீம் அக்ரம் அகியோர் ஆவர்.
இச்சந்திப்பின் பிரதான நோக்கம் மாகாண சபையின் கீழ் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது வெளியீடுகளுக்கு பின்புலம் ஒன்றை உருவாக்குவதாகும்.
இச்சந்திப்பில் தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொண்ட எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை நூல் உருவில் கொண்டுவருவதற்குரிய பிரச்சினைகளை முன்வைத்ததுடன். பாடசாலை மட்டத்திலிருந்து எழுத்தாளர்கள் உருவாகுவதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவதன் அவசியங்களையும் குறிப்பிட்டனர்.
மிகவும் அறிவுபூர்வமாகாவும் எளிமையாகவும் எழுத்தாளர்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்ட அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நூலுருவாக்கங்களை நெறிப்படுத்தி அதன் அச்சகப் பிரச்சினைகளை தீரப்பதற்கான எதிர்கால திட்டங்களை முன்மொழிந்தனர்.
அதில் மாகாண கல்வி அமைச்சிற்கு கொண்டுவரப்படவுள்ள அச்சியந்திரங்கள் ஊடகா மாகாண எழுத்தளார்களின் நூற்களை அச்சிட்டு குறைந்தபட்ச உதவிகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதனை கருத்திட்டமாக கொண்டுள்ளதனை குறிப்பிட்டனர்.
குறிப்பாக இதுவரை இம்மாகணத்தில் தமிழ் மொழி மூல எழுத்தாளர்களுக்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவர்களது கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் அவர்களது சமூக நல்லினக்க எழுத்துத்துறை பங்களிப்புகள் பற்றியம் விதந்து கருத்துக்கள் முன்மொழியப்பட்டதன் காரணமாக அமைச்சர் மிக நெருக்கமான அணுகுமுறைகளை கையாண்டமை குறிப்பிடத்தக்கது
வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வு எழுத்தாளர்களது பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான வழிகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதுடன். பிரதேச எழுத்தாளர்கள் இந்த விடயத்தில் தீவிர செயற்பாடுகள் ஊடாக தமது இலக்குகளை அடைந்து கொள்ள துணியவேண்டும் என்றும்  படிகள் இங்கு விதந்து குறிப்பிட விளைகின்றது.

படிகள் 31 - புதிய இதழ்


அநுராதபுர முஸ்லிம்களின் வரலாற்று ஆவணம்

பூர்வீக கதவுகளைத் தட்டும் 'அநுராதபுரத்தின் முதுசொம்'
வரலாற்று ஆவணங்கள் மீதான வாசிப்பு


-    எல். வஸீம் அக்ரம்


இலங்கையின் வரலாற்றில் அநுராதபுரப் பிரதேசம் தனித்துவமிக்க ஒன்றாக இருக்கின்றது என்ற கருத்து வரலாற்று ஆய்வாலர்களால் அடிக்கடி முன்மொழியப்படுகின்றது. இவ்வாறு தவிர்க்க முடியாத ஒரு பிரதேசத்தின் சிறுபான்மை சமூகத்தின் இருப்பை ஆவணப்படுத்த வேண்டிய தேவை அந்தந்த சமூகங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறான ஒரு பணியை அநுராதபுரம் முதுசம் நிறைவேற்றியுள்ளது என்று புலங்காகிதமடைகிறோம்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளின் முக்கிய கருப்பொருளில் அநுராதபுரத்து இரசாதானியிலிருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது அநுராதபுர முதுசத்தின் பிரதான அடைவாக இருக்கின்றது. தவிரவும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் அநுராதபுர நகரப் பிரதேச வாழ் மக்களின் வரலாற்று ஆவணங்களை பூர்வீகம், அரசியல், சமூகவியல், பண்பாடு, நாகரீகம், கல்வி மற்றும் கலை இலக்கியம் என்ற பல்வேறு துறைகள் ஊடாக இன்றுவரையுள்ள விடயங்களையும் அறிந்திடாத முதுசங்களையும் அநுராதபுரம் முதுசொம் என்ற ஆவணம் நமக்கு கோடிட்டுக் காட்டியுள்ளது.

இவ்வாவணம் அநுராதபுரத்தில் சேவை பத்து வருடங்களுக்கு மேல் அரச சேவையில் சேவை செய்து, ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் வெளியிடப்பட்டதாகும். இவ்வாண காப்பகத்தை நூலாக்கியவர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள். இந்த சமூகத் தேவையை உதவியவர் அல்ஹாஜ் எச்.எஸ்.ஏ. முத்தலிப் அவர்கள்.

இன்று அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் தமது இருப்பை பதிவு செய்வதில் அவர்களது வரலாறு தொடர்பான தவறான புரிதல்கள் இருப்பதானல் இவ்வநுராதபுர முதுசொம் இந்த சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அலப்பரிய சாதனையை நிறைவேற்றியுள்ளது என்று முகுடம் சூட்டலாம். வெறும் வார்த்தை கதையாடல்களுடாக சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பை விலைபேசிக் கொண்டு இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் ஆவண ரீதியாக மட்டும் பேச விளைகின்ற இவ்வாறான முயற்சியை நாம் முன்னின்று வாழிநடத்தவும் வாழ்த்தவும் வேண்டும்.

காலம் காலமாக முஸ்லிம் சமூகத்தை ஒரு வியாபார சமூகமாக பேச விளைகின்ற இன்றில் அதற்கு ஒரு படி மேலே சென்று கிட்டத்தட்;ட பல நூறு ஆண்டுகள் பின் சென்று அநுராதபுர நகர முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணமாக்கியுள்ளனர்.

இந்நூலில் அல்லது ஆவணத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரையும், ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற கட்டுரையும் நூலராசியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் எழுதிய 'அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள்' என்ற  கட்டுரையும் நூலுக்கு மகுடம் சேர்க்கின்றன.

இந்நூலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரை, அநுராதபுர முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பேசுகின்றதுடன் பாரம்பரியங்களையும் பேசுகின்றன. அவற்றில் குடியேற்றங்கள், குடிப்பரம்பல்கள், அம்மக்களின் ஆரம்ப வாழ்வு பற்றி நிறைவாகப் பேசுகின்றன.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற கட்டுரை பிந்திய குடியேற்றங்கள், அவற்றின் பெயர்வு, அதற்கு பின்னணியான அரசியல் முறைகள் இன அச்சுறுத்தல்கள் என்பன பற்றிய விடயங்கள் ஆதாரபூர்வமாக சுட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு கட்டுரைகளும் வரலாற்றின் தன்மையை பேசுகின்றது.

இவ்வொவொரு கட்டுரையின் பின் புலத்திலும் அநுராதபுர முஸ்லிம்களின் வரலாறு பின்வருமாறு பதிவு செய்யப்படுகின்றது.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்ததற்கான, வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவௌகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவௌகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் 'விதானை'யாக சேவையாற்றிய 'முத்து விதானை அசனார்' என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும் 'மு.அ' எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

என்ற தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இவ்வாவணக் காபகத்தில் அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள் என்ற கட்டுரை முன்னர் குறிப்பிட்ட ஏனைய இரு கட்டுரைகளிலும் இருந்து சற்று வேறுபட்டு மிக அண்யைத் (பிந்திய தகவல்கள்) தரவுகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பிந்திய தரவுகள் குறிப்பாக முஸ்லிம்களின் இன்றைய கல்வி, கலை இலக்கிய, சமயம் என்ற பெரும் பண்புகளால் நிறுவப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய தகவல்கள் குறிப்பிட்டுச் சொல்லுளவுக்கு எந்த ஒருவரிடமும் இருக்கவில்லை. அவற்றை வாய்மூலமாக மட்டுமன்றி குப்பைத் தொட்டிகளிலுள்ள ஆவணங்கள் வரை கிளறி எடுத்து ஆவணமாக பேச முனைந்துள்ளதை இங்கு விதந்து குறிப்பிட வேண்டும்.

ஒரு கல்வியலாளராக, இலக்கிய கர்த்தவாக, ஆய்வாளராக, சமூக சேவகராக என்ற பல்பரிமாண முகங்கொண்டு அன்பு ஜவஹர்ஷா இந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் முஸ்லிம்களின் மிக நுண்ணிய பிரச்சினைகளையும் பூர்வீக புதிவகள் மற்றும் களைவுகளையும் முன்னிறுத்தியுள்ளதை மனங்கொள்ள வேண்டும். ஆய்வு மாணவனாக சமூகத்தின் சகல விடயங்களின்பால் தன்னை செயற்படுத்தி தன்னை விஞ்சிய பணியை செய்துள்ளதாக புகழ முடியும்.

இந்தக் கட்டரையில் சமயம், கல்வி, கலை இலக்கியம், அரசியல்  தொடர்பான அரிய தகவல்கள் பதியப்பட்டுள்ள. அவற்றில் துறைசார் நிறுவனங்களின் மூலம், தோற்றம், அதன் பின்புலம், அவற்றுக்கு பணியாற்றியவர்களின் பெயர்கள் அவர்களின் பணி முறைகள் என்ற விடயங்கள் மிக விரிவாகவும் நுட்பமாகவும் பொறுப்புடனும் பதிவுகளாக இருக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.

1870 ம் ஆண்டு திசாவௌ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன என்ற இனப்பிரிப்புச் செய்தி இங்கு பதியப்பட்டுள்ளது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும், அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார். இங்கு விதந்து குறிப்பிட வேண்டி ஒரு விடயம் 2012ம் ஆண்டு உடைக்கப்பட்ட ஒட்டுப்பள்ளம் தர்காவின் வரலாறும் அதே ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட தக்கியா பற்றிய பதிவுகளும் இங்கு இருக்கின்றரதாகும்.

கல்வி தொடர்பான ஆய்வில் பாடசலைகளின் தோற்றம், அதில் பதிவு செய்த மாணவர்கள் மற்றும் இன்னும் அரிதான தகவல்களைப் பதிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. அநுராதபுர நகரில் உள்ள ஸாஹிரா மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலம் ஆகிய இரு பாடசாலைகளின் தோற்றம், வளர்ச்சி என்ப இங்கு பதிவாகியுள்ளதுடன், அவற்றின் தோற்றத்திற்கு முன் இவர்களது கல்வி முறை பற்றி பதிவுகளும் காணப்படுகின்றன. (கட்டுரையில் உள்ள விடயங்களை சுருக்கமாக பதிவு செய்கிறேன்)

இந்நூலில் தொகுக்கபட்டுள்ள காலை இலக்கியம் சார்ந்த பதிவுகள் ஏலவே பல்வேறு கட்டரைகள் வாயிலாக (அன்பு ஜவஹர்ஷா) பேசப்பட்டிருந்தமையினால் அவற்றினை மிக எளிய வடிவங்களைக் குறிப்பிடலாம். கலை இலக்கியங்கள் காலத்தின் பதிவுகள் என்ற அடைமொழியை அவை நிறுவியுளுள்ளன. குறிப்பாக அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய ஆவணங்களையும் வெளிவரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் தொடர் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:

•    சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
•    விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
•    கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் வெளியீடு)
•    தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
•    இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
•    மாணவர் குரல் (அண்டன் ஞானராஜா)
•    தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
•    புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
•    வீரத் தமிழன் (மர்ஹூம் எஸ்.எச். எம்.ஸஹீர் )
•    தேன்துளி (மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
•    பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா)
•    பொறிகள் - தெகுக்கபட்ட கவிதைகள் (அன்பு ஜவஹர்ஷா)
•    காவிகளும் ஒட்டுண்ணிகளும் - (அன்பு ஜவஹர்ஷா)
•    அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
•    அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
•    தொலைச்சுடர் (ஜன்ஸி கபூர் )
•    அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
•    படிகள் (எம். வஸீம் அக்ரம்)


இங்கு பதியப்பட்டுள்ள விடயங்களில் அரச துறைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வரலாறு மிக முக்கியமான பதிவுகளாக கொள்ளலாம். அரச சேவையில் முஸ்லிம்களின் பணி என்பது அப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. இதில் அநுராதபுர இராசதாணி முதல் அரச நிறுவனங்களில் சாதாரண இலிகிதர் வரை சேவையாற்றியவர்களின் அனைத்துவிடயங்களும் அடக்கப்பட்டுள்ளமையை இன்னும் மெச்ச இயலும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் சமூக கலாசாரப் பணிகள், விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு சாதணைகள் புரிந்தவர்களின் பெயர்கள் என்ற பல்வேறு தரவுகள் தொடர்புற்றும் தொடர்பு படாமலும் பதியப்பட்டுள்ளமை ஈர்ந்து கவனிக்கத்தக்கது.

நூலின் (கட்டுரையின்) பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், ஆவணங்கள் பற்றிக் குறிப்பிடுவது இந்த நூலின் மிக முக்கிய கட்டம் எனலாம். இதில் பல்வேறு ஆவணங்கள் சுமார் 100 ஆண்டுகளை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இதில் 1900 களில் அநுராதபுர புதிய நகரப்; பிரதேசத்தில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பத்தாட்சிப் பத்திரம், அநுராதபுரம் பழைய நகர், புதிய நகருக்கு மாற்றப்பட முன்னர் இருந்த குடியிருப்பு விதியமைப்புத்திட்டங்கள், பிச்சைத் தம்பி முஹதீன் தம்பி என்பவர் 1946ம் ஆண்டு நகர (தற்காலிக) முதல்வராக நியமனம் பெற்ற கடிதத்தின் பிரதி, 1899ம் ஆண்டு அநுராதபுரம் பழைய நகர முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்துள்ள மாகாணப் பதிவின் வெளியீட்டு அடையாளம், அந்த ஆவணத்தில் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பத்தியின் பக்கப்பிரதி, 1891ல் திசாவௌ எனும் இடத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தாமான காணியொன்றின் உறுதிப்பத்திரம், 1960 ஆண்டு பழைய நகர் பள்ளிவாயலின் பரிபாலன சபை விபரம், 1989.10.18 அன்று பிறந்த பிச்சைத் தம்பி மொஹிதீன் தம்பியின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் அவரது தந்தையின் தொழில் நகர பாதுகவலர் அநுராதபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆவணம், அவரது காதி நீதாவன் விண்ணப்பம், 1989ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியின் நில அளவைப் படம், 1957ம் ஆண்டு முதல் முறையாக அகில இலங்கை மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் 9 முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டமைக்கான பத்திரிகைச் செய்தி, 1927ம் ஆண்டு ஒட்டுப் பள்ளம் தர்காவில் ராத்தீப் நடத்தியவர்களின் பெயர்ப் பட்டியல், 1959, 1961ம் ஆண்டுகளில் முஸ்லிம்களிடம் பெறப்பட்ட காணிகளுக்கான வர்த்தமாணி, 1958.12.12. அன்று இருந்த முஸ்லிம் வாலிபர் சங்க நிர்வாகிகளின் கடிதம், 1957ம் ஆண்டு சுங்காரு உழவு இயந்திர நிலையத்தில் கனிசமான முஸ்லிம்கள் வாழ்ந்ததந்கான புகைப்படம், 1967களில் நகர முஸ்லிம் இளைஞர்களின் சமூக சேவா நிறுவனத்தின் அங்குரார்ப்பணப் புகைப்படம், 1968ம் ஆண்டு முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் கட்டிகொடுக்கப்பட்ட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் முதல் நாள் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள், 1967ம் ஆண்டு மே தின ஊர்வலம் நடத்திய முஸ்லிம் சோசலிசக் கட்சியின் ஊர்வலப் புகைப்படம், முஸ்லிம்களின் பூர்வீகத்தை நிறுவுகின்ற மு.அ என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதியின் பெயர் பொறிக்கபட்ட கற்தூண்கள் இரண்டின் புகைப்படம். உள்ளிட்ட இன்னும் பல ஒளிப்படங்கள், புகைப்படங்கள் சமய, சமூக, கல்வி, கலை இலக்கிய, விளையாட்டு மற்றும் அடையாள விடயங்களின் முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்கின்ற ஆவணங்கள் இணைக்கபட்டுள்ள.

இந்த ஆவணங்களில் பெரும்பாலனவை மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் சுல்தான் அவர்களின் ஆவணங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த சகல பதிவுகளுக்குப் பின்னும், இந்தப் பதிவுகளை ஆவணமாக்கவும் சமூக மாற்றத்திற்காக உழகை;கின்ற ஒரு சக்தியாகவும் இருக்கின்ற தனிமனிதர்களும் குழுக்களும் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இது தவிர இந்த முயற்சி பெரும்பான்மைச் சமூகத்திற்குள் இருக்கின்ற சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பை பாதுகாக்கின்ற அறிவுபூர்வமான ஒன்றாக கருதலாம். இது அநுராதபுர சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டும் உரித்தான குறைந்த பட்ச முயற்சியாக இருப்பினும் இது ஈழத்து ஆவண காப்பாளர்களின் தேவையாக இருக்கின்றது. இவ்வாய்வுக் கட்டுரைகள் மற்றும் ஒளிப்படங்கள், புகைப்படங்கள் என்பன இணையத்திற்கு பதிவேற்றப்பட வேண்டியதன் தேவை இங்கு வழியுறுத்த வேண்டும்.

ஏதிர்காலங்கள் விரல் அடையாளங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்ற நிலை தோன்றியுள்ள நவ யுக நிலையில் அதற்கான காப்பு முயற்சிகளை இப்போதே ஆரம்பிப்பது சாலச்சிறந்தது என்று பணிவுடன் குறிப்படுகிறேன்.








நிஹலிசம்

கேட்டதை அறிந்தேன். அறிந்ததைப் பகிர்ந்தேன்.

நிஹலிசம் (நீலிசம்)

இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் (Nihilism, ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil ) என்பது ஒரு மெய்யியல் ரீதியான நம்பிக்கை, இது, வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது மேற்பட்டதை மறுத்தலைக் குறிக்கிறது. மிகப் பொதுவாக, நீலிசம் என்பது இருத்தலின் இல்லாமை தொடர்பாக விவரிக்கப்படுகிறது, அதாவது வாழ்க்கை[1] எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல
்லாமல் இருக்கிறது. நியாய இல்லாமை தத்துவவாதிகள், உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் மாயையால் உருவாக்கப்பட்டவை. நீலிசம், தத்துவரீதியான அறிவுசார், மாயை சார்ந்த, அல்லது மாயைசார்ந்த அறிவு வடிவங்களை எடுக்கக்கூடும், அதாவது முறையே, அறிவின் சில அம்சங்கள் சாத்தியமில்லை அல்லது நமது நம்பிக்கைக்கு மாறானதாக இருக்கும், உண்மையின் சில கூறுகள் உண்மையில் இருப்பதே இல்லை என்ற பொருள்களைத் தரும்.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் - சிறு பதிவு

அநுராதபுர மாவட்ட சிறுபான்மைச் சமூகம்

அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 71 386 மக்கள் வாழ்வதாக அண்மையில் தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள சனத் தொகை கணக்கெடுப்பு அறிக்ரகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் சுமார் 8.3 வீத சனத்தொகையாக கருதப்படுகின்றது. இத்துடன் சுமார் 3 391ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் (இந்துக்கள்) வாழ்கின்றார்கள் என்று ஊகிக்கப்படுகின்றது. இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் இருப்பு, சமூக பொருளாதார அபிவிருத்திகள் இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களை விட சமகாலத்தில் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செய்து அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்புக்களை வகுத்துக் கொள்வது இன்றைய போராட்டமாகவே கொள்ள வேண்டும்.

அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. ...


 
இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் இருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்ற ஆய்வு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 33 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 2000 – 3000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவதில்லை.

இப்பிரதேச சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் இடம் பெற்றுள்ளதை வரலாற்றுத் தகவல்கள் சான்றுபடுத்தியுள்ளன.

அநுராதபுர மாவட்டத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மைச் சமூகத்துடன் சமூக பொருளாதார கல்வி விடயங்களில் இனக்கத்துடனும் சகவாழ்வுடனும் இருந்துள்ளதனை அவதானிக்கலாம்.

இந்த இருப்பை குலைக்கும் வண்ணம் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்கும் போது கவலையாக உள்ளது.
 
1. முஸ்லிம்களின் சமூகத்துள் நிலவுகின்ற நுண்தன்மையான பிரதேச   முரண்பாடுகள்
2. முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவுகின்ற சமய அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள்.
3. ஏனைய சமூகங்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.

இவ்வாறான அடிப்படைக் காரணங்கள் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை மக்களின் இருப்பை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினையாக சவாலாக அடையாளம் காணலாம்.

அநுராதபுரத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் பிரதேச பிரிவுகளால் தூர்ந்த நிலையில் வாழ்கின்றனர். அதாவது இவர்கள் குவியப் படுத்திய சமூக அமைப்பாக அன்றி பெரிய இடைவெளி மிக்க நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதானது, இந்த மக்களின் கலை இலைக்கிய, கல்வி, சமூக, சமய, பொருளாதார, அரசியல் விடயங்களில் ஒருமைத்துவ நிலையை அடைவதில் தடையாக உள்ளது.
 
அநுராதபுர சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியான சற்று ஆறுதல் அளிக்கும் வண்ணம் இருக்கின்றது. இருப்பினும் அதனூடான சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி வெளிப்பாடுகள் போதாமையைக் காட்டுவதாக சில அவதானங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு மேற்சொன்ன காரணங்கள் பின்னூட்டலாய் அமைகின்றன. எனவே எதிர்கால சமூகத்தின் நலன் கருதி அநுராதபுர சிறுபான்மைச் சமூகங்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உசிதாமான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது எமது அவா.

கவிதை

ஒக்டோபர் கறுப்பு


விரிவான பொழுது விழிக்க
வயதுக்கு விஞ்சிய வானை முதுகு கூனி நோக்க
இரவு புடைத்து தொங்கியது
எங்கள் முகாம் குடிசைகளில்

அகதி அடையாள அணியில்
...
இதிகாசங்கள் இரண்டு தான் நின்று
நரைத்த இளமையை
திரும்பிப் பார்த்து அழுகின்றது
எங்கள் துயர நொடி